top of page

கருங்குறுவை குழிபணியாரம்

Prep Time:

15Minutes

Cook Time:

10Minutes

Serves:

3Servings

Level:

Intermediate

About the Recipe

CHICKENPOX நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. உடலின் உயிர்ச்சக்தியை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துகிறது.

Ingredients

  • 1 கப் கருங்குறுவை அரிசி

  • 1 கப் கைக்குத்தல் அவல்

  • 1/4 கப் உளுத்தம்பருப்பு

  • 1/4 டீ ஸ்பூன் வெந்தயம்

  • 1/4 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்

  • 4 டேபிள் ஸ்பூன் கேரட் துருவல்

  • 4 டேபிள் ஸ்பூன் முட்டைகோஸ் துருவல்

  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சித் துருவல்

  • கடுகு

  • 1/4 டீ ஸ்பூன் கடலைப்பருப்பு

  • சிறிதளவு நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை

  • தேவையான அளவு உப்பு, எண்ணெய்

Preparation

  • அரிசியை 3 மணி நேரமும், அவல், உளுந்து மற்றும் வெந்தயத்தை ஒரு மணி நேரமும் ஊறவிடவும், பிறகு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் புளிக்கவிடவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்கவும். அதனுடன் கேரட்த் துருவல், முட்டைகோஸ் துருவல், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்து காய்கள் வேகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

  • வதங்கியவற்றை அப்படியே புளித்த மாலில் சேர்த்துக் கிளறவும், பணியாரக் கல்லைச் சூடாக்கி, குழிகளில் எண்ணெய் ஊற்றவும். பிறகு மாவை குழிகளின் பாதியளவுக்கு ஊற்றி, வெந்ததும் திருப்பிவிட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுத்து, கேரட் துருவல் தூவி சூடாக சட்னியுடன் பரிமாறவும்.

bottom of page