top of page

கருங்குறுவை உன்னியப்பம்

Prep Time:

20Minutes

Cook Time:

7Minutes

Serves:

2Servings

Level:

Beginner

About the Recipe

கருங்குறுவை அரிசியில் செய்த உணவுகள் உடலில் பித்த செயல்பாடுகள் மற்றும் ஹார்மோன் சுரப்புகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் இது ஆச்சரியப்படும் விதமாக கருவுறுதல் பண்புகளையும் அதிகரிக்கிறது.

Ingredients

  • கருங்குறுவை அரிசி மாவு அரை கப்

  • நேந்திரம் பழம் - ஒன்று

  • வெல்லம் கால் கப்

  • ஏலக்காய்த்தூள் ஒரு டீஸ்பூன்

  • தேங்காய்த் துருவல் ஒரு கப்

  • பாதாம் பவுடர் ஒரு டேபிள்ஸ்பூன்

  • நெய் தேவையான அளவு

  • கோதுமை மாவு அரை கப்

Preparation

  • அடுப்பில் பாத்திரத்தை வைத்து வெல்லம், சிறிதளவு தண்ணீர் விட்டு வெல்லத்தைக் கரைத்து வடிகட்டவும்.

  • நேந்திரம் பழத்தை பொடியாக நறுக்கவும்.

  • மிக்ஸியில் அரிசி மாவு, கோதுமை மாவு, நறுக்கிய பழம், ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்து, ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் சேர்க்கவும்.

  • மாவில் தேங்காய்த் துருவல், பாதாம் பவுடர் சேர்த்துக் கலக்கவும். குழிப்பணியாரக் கல்லைச் சூடாக்கி சிறிதளவு நெய் ஊற்றி, மாவைக் குழிகளில் ஊற்றி வேகவிட்டு திருப்பிப்போட்டு மறுபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

bottom of page