top of page

கம்பு கூழ்

Prep Time:

10 Minutes

Cook Time:

20 Minutes

Serves:

5 Servings

Level:

Beginner

About the Recipe

கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பு குறைவாக உள்ளது.
இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும்.
உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்து கொள்வதன்மூலம் பலன் கிடைக்கும்.

Ingredients

  • கம்பு 1 கப்

  • தண்ணீர் அரைப்பதற்கு

Preparation

  • முதலில் 1 கப் கம்பை எடுத்து கல் மற்றும் தூசிகளை நீக்கிய பிறகு வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  • நன்கு காய்ந்த கம்பை மிக்சியில் போட்டு நொறுநொறுவென பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

  • பிறகு ஒரு கனமான பாத்திரம் எடுத்து நீங்கள் எடுத்துக் கொண்ட கம்பு மாவுவிற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் ஓரளவிற்கு கொதி ஏறிய பிறகு கம்புமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

  • மாவு தண்ணீருடன் சேர்ந்து கொதிக்க ஆரம்பிக்கும் போது அவற்றை ஒரு கரண்டி அல்லது அகப்பை வைத்து கிண்ட வேண்டும். தொடர்ந்து நன்றாக கிளறி தேவையென்றால் உப்பு சேர்த்து கொள்ளலாம்.

  • அவை நன்றாக கொதித்து கெட்டியாகிய பிறகு கீழே இறக்கி ஆற வைக்கவும். நீங்கள் இவற்றை எப்போது தயார் செய்தாலும் அவை செட் ஆவதற்கு சில மணி நேரம் ஆகும்.

  • மேலும் இவற்றை மாலை அல்லது இரவு நேரத்தில் செய்து மறுநாள் காலையில் குடிப்பது மிகவும் நல்லது. வெறும் கம்பு கூழாக குடிப்பதற்கு சிறிதளவு தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொண்டால் சுவையும் கூடுதலாக இருக்கும்.

bottom of page