top of page

கத்திரிக்காய் சாதம்

Prep Time:

20 Minutes

Cook Time:

45 Minutes

Serves:

3 Servings

Level:

Advanced

About the Recipe

கத்தரிக்காய் குறைந்த கலோரியும், நிறைய சத்துக்களும் அடங்கியது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல்நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பான குரல் முதலியவற்றைக் குணப்படுத்தும்.

Ingredients

  • 4 கத்தரிக்காய்

  • 1 கப் பாசுமதிஅரிசி

  • 2 தேக்கரண்டி எண்ணெய்

  • 1/2 தேக்கரண்டி கடுகு

  • கறிவேப்பிலை

  • 1 பெரியவெங்காயம்

  • 2 தேக்கரண்டி வேர்க்கடலை

  • 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகள்

  • 1/2 தேக்கரண்டி சீரகம்

  • 1 தேக்கரண்டி வெள்ளை அல்லது கறுப்பு எள்

  • 2 தேக்கரண்டி துருவிய தேங்காய்

  • 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

  • 1/2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

  • 1 தேக்கரண்டி மிளகாய்தூள்

  • 1 தேக்கரண்டி எண்ணெய்

  • உப்பு தேவையான அளவு

Preparation

முன் தயாரிப்பு

  • பாசுமதி அரிசியை கழுவி 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்

  • கத்தரிக்காய்களை கழுவி காம்பை நீக்கி விட்டு ஏழு அல்லது எட்டு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

மசாலா செய்முறை

  • ஒரு கடாயில் ஒரு தேக்கரண்டி சமையல் எண்ணெய் சேர்த்து சூடானதும் வேர்க்கடலை, எள், கொத்தமல்லிவிதைகள், சீரகம் மற்றும் துருவியதேங்காய் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். 

  • பிறகு கரம் மசாலாதூள், மிளகாய்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு கலவையை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்து வைக்கவும்.

கத்திரிக்காய் சாதம் செய்முறை

  • பிரஷர்குக்கரில் 2 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வதக்கவும். 

  • நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து சிலநிமிடங்களுக்கு வதக்கவும், கத்திரிக்காய் மென்மையானதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கலக்கவும் இப்பொழுது ஊற வைத்து வடிகட்டிய ஒரு கப் அரிசியை சேர்த்து 1.5 கப் தண்ணீர் சேர்த்து இரண்டு சத்தம் வைக்கவும் .

  • குக்கரில் பிரஷர் வெளியானதும் குக்கரைத் திறந்து சாதத்தை மென்மையாக கிளறி விடவும்


bottom of page