top of page

இனிப்பு உளுந்து வடை

Prep Time:

20Minutes

Cook Time:

10Minutes

Serves:

9Servings

Level:

Intermediate

About the Recipe

உணவில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட்டால் பெரும்பாலான குழந்தைகளுக்கு அனிமீயா எனப்படும் ரத்த சோகை நோய் உருவாகிறது. கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.

Ingredients

  • உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ

  • சர்க்கரை - 1/4 கிலோ

  • அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்

  • உப்பு - 1 சிட்டிகை

  • எண்ணெய் - 1/2 லிட்டர்

Preparation

  • முதலில் உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து சிறிது தண்ணீர் தெளித்து, கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். அரைக்கும் போதே அரிசி மாவும் உப்பும் சேர்த்து அரைக்கவும்.

  • அடுத்ததாக ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைக் கொட்டி சர்க்கரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து  பிசுபிசு பதத்தில் நன்றாக பாகு காய்ச்சிக் கொள்ளவும்.இதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

  • அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள உளுந்து மாவை வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து சர்க்கரைப் பாகில் போட்டு ஊற விடவும்.

  • சிறிது நேரம் கழித்து பாகில் இருந்து வடையை எடுத்து பரிமாறவும்.

bottom of page