top of page

ஆத்தூர் கிச்சிலி சம்பா தக்காளி சாதம்

Prep Time:

15 Minutes

Cook Time:

25 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

கிச்சிலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதன் சோற்றை சாப்பிட்டால் தேகச் செழுமையும், உடல் பலமும் உண்டாகும்.
இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் அதிகரிக்கும் .
அது மட்டுமின்றி அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கும் ஏற்ற அரிசியாக உள்ளது.

Ingredients

  • 1 கப் அரிசி

  • 3 பெரிய வெங்காயம்

  • 6 தக்காளி

  • 3 வர மிளகாய்

  • 4 பச்சை மிளகாய்

  • 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • கல் உப்பு

  • சிறிது மஞ்சள்தூள்

  • 1/4 கப் கடலெண்ணெய்

  • 1 ஸ்பூன் கடுகு

  • 1 ஸ்பூன் சோம்பு

  • சிறிது கறிவேப்பிலை

  • சிறிது கொத்தமல்லிதழை

Preparation

  • எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் வரமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பின் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தக்காளி மசிந்து வரும் வரை வதக்கவும். பின் ஊற வைத்த அரிசி சேர்த்து ஒன்றுக்கு இரண்டு மடங்கு தண்ணீர் சேர்த்து கொத்தமல்லிதழை சேர்த்து கொதிக்க விடவும்.

  • கொதித்ததும் குக்கரை மூடி 2 விசில் வந்ததும் ஐந்து நிமிடம் வரை சிம்மில் வைத்து இறக்கவும். ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஒரு முறை மெதுவாக சாதம் குழையாமல் கிளறவும்.

bottom of page