top of page

ஆத்தூர் கிச்சடிசம்பா சர்க்கரை பொங்கல்

Prep Time:

10 Minutes

Cook Time:

40 Minutes

Serves:

10 Servings

Level:

Beginner

About the Recipe

கிச்சிலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் இதன் சோற்றை சாப்பிட்டால் தேகச் செழுமையும், உடல் பலமும் உண்டாகும்.
இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும் அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் அதிகரிக்கும் .
அது மட்டுமின்றி அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கும் ஏற்ற அரிசியாக உள்ளது,
சமீப காலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.

Ingredients

  • 2 கப் ஆத்தூர் கிச்சிலி பச்சைஅரிசி

  • 3/4 கப் பாசிப்பருப்பு

  • 1 கப் பசும் பால்

  • 3 கப் வெல்லம்

  • 15 முந்தரி பருப்பு

  • 2 ஸ்பூன் திராட்சை

  • சிறிதளவு ஜாதிக்காய்

  • சிறிதளவு பச்சை கற்பூரம்

  • 1/2 மூடிதேங்காய் துருவல்

  • 5 ஏலக்காய்

  • 1/2 கப் பசுநெய்

Preparation

  • முதலில் பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

  • 1 கப் பாலுடன் மீதம் நீர் சேர்த்து மொத்தமாக 7 கப் என்ற விகிதத்தில் கொதிக்க விடவும்.

  • நன்கு கொதித்து வந்தவுடன் களைந்த புது அரிசி ஆத்தூர் கிச்சடியையும் பாசிப்பருப்பையும் சேர்த்து கிளறி விடவும்.

  • தண்ணீர் சுண்டி நன்கு குழைய வெந்த பின்பு வெல்லத்தை பொடித்து சேர்த்து அடுப்பை சிறுதீயில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறி விட வேண்டும். சிறிது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


  • நன்கு வெந்து பொங்கல் பக்குவத்திற்கு வந்த பின்பு நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் துருவலை சேர்த்து பொடித்த ஜாதிக்காய், ஏலக்காய்தூள், பச்சை கற்பூரம் சேர்த்து மீதமிருக்கும் நெய்யையும் சேர்த்து கலந்து விட சுவையான பாரம்பரிய ஆத்தூர் கிச்சிலி அரிசி சர்க்கரை பொங்கல் தயார்.

bottom of page